பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 சொர்க்கவாசல் (வெற்றிவேலன் அரண்மனையில் ஓர் கூடம்-மரகத மணி படுக்னகயில்-சேடிகள், பணியாளர்கள், மருத்துவர்கள் உள்ளனர். மரகதமணி புரண்ட படி உளறிக் கொண்டிருக்கிறாள். மரசு: மாமா! பாடு மாமா-- பாடு- -மா...மா! மருத்: (சேடியிடம்) அந்த ஒரு பேச்சுத்தான், வேறே நினைப்பு இல்லை - வேறே பேச்சு இல்லை ---மாமா- பாட்டு. சே: நெருப்பாகக் காயுது உடம்பு! மருத்: நிலைமை ஆபத்துதான்--மன்னர் என்ன சொல் வாரோ? [வெற்றிவேலன் இறைக்க இறைக்க ஓடிவருகி DITT...] வெற்: கண்ணே, மரகதம்! அடடா! இவ்வளவு நிலமை மோசமாசிற வரையிலா பார்த்துக் கொண்டிருந்தீர்கள்?" மருத்துவரே! என்ன இது? மருத்: (மரியாதையாக) கடுமையான ஜுரம், குழந்தை. மாடியிலிருந்து விழுந்துவிட்டது. வெற்: (மண்டைக் கட்டு இருக்கக் கண்டு பதறி) பல மான அடி- மடப்பயல்! பணியாள் தூங்கிவிட்டானா?எப் படி விழுந்தது மரகதம்? மரக: (கண் திறக்காமல் குளறு மொழியில்) பாட்டும் பாடு - பாடு - மாமா--ஒரே ஒரு பாட்டு. (வெற்றிவேலன் முகம் சுளித்துக் கொள்கிறான்.] மருத்; எனக்குத்தெரிந்த மூலிகைகள் எல்லாம் கொடுத் தாகிவிட்டது. குழந்தையின் மனம் ஒரே விஷயத்தில் பதிந்து விட்டது. வேறு நினைவு இல்லை. இப்படியே இருந்தால் பேராபத்துதான்,