சொர்க்கவாசல் 237 அரு: நாத்திகன் -பழிபாவத்துக்கு அஞ்சுவானா? இவனைக் கொல்லாவிட்டால், மன்னா, தர்மம் தழைக்காது. வெற்றி: (மேலும் அலட்சியமாக) கிடக்கிறான்! அனு பவமற்றவன்! காதகனின் கத்தியும் கட்டாரியும் என்னை என்ன செய்யும், குருதேவரின் ஆசி இருக்கும்போது! இவன் அறியான்.... பேழையைத் திறந்து அருமறையிடம் காட்டி) எனக்குச் சாகாவரம் அருள தாங்கள் தயாரித்தஜெபமாலை! எனக்கரக விசேஷ பூஜை செய்து தயாரித்த ஜெப மாலை அல்லவர இது! ஜெபம் நடக்கட்டும்! (பேழையை அருமறையிடமும் மாசியிடமும் மாறிமாறிக் காட்ட இருவ ரும் மிரள்கிறார்கள்) கொடியவர்களே! மதவேடமிட்டுத் திரிந்து என் மதியை மாய்த்த மாபாவிகளே! ஆதிக்க வெறிக் காக ஆண்டிக் கோலமிட்ட அக்கிரமக்காரர்களே! உங்கள் படுமோசம் அறியாமல் உத்தமன் மதிவாணனுக்குக் கேடு பல செய்தேன்! நானோர் கடையன்! நில்லாதீர், என் முன்! (பணியாட்களைப் பார்த்து) இவர்களை இழுத்துச் செல் லுங்கள்... சிறைக்கு... [இழுத்துச் செல்லுகிறார்கள்.] மதி: (தழதழத்த குரலில்) வேந்தே... வேந்தே... வெற்றி: (உருக்கமாக) உத்தமனே! உன்னிடம் மன் னிப்பு கேட்கிறேன்! (தள்ளாடி, அவன் அருகே வந்து, மடல் கொடுத்து)இதோ மன்னிப்பு மடல் மக்களாட்சி மடல்!" மதிவாணா! நான் திருந்தி விட்டேன்! (சாய்கிறான் காட்சி-123 இடம்: வேழ்நாட்டு அரண்மனையில் ஓர் கூடம். இருப்: மதிவாணன், குமாரதேவி.
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/237
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை