பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 சொர்க்கவாசல் மதி: திவகா! உன் வாழ்வு பரிமளமாக இருக்க வேண் டும் என்பதுதான் என் நோக்கம். உன் பொருட்டு நான் எத் தகைய கஷ்ட நஷ்டமும் ஏற்கச் சித்தமாக இருப்பவன். திலகா : இதென்ன அண்ணா! நான் திகில் கொள்ளும் விதமாகப் பேசுகிறாய். மதி: (அன்புடன்) இல்லை தேனே! திகிலூட்ட அல்ல; நாம் ஏழைகளல்லவா? திலகா : இன்றுதானா? நெடுநாளாக! மதி: முத்துமாணிக்கம் மாளிகை வாசி. திலகா திகைப்புடன் மதியைப் பார்க்கிறாள்... உன் மன மாளிகையிலே அவனுக்கு இடம் கொடுத்து விட் டாய். அவனும் உன்னை மனப்பூர்வமாகக் காதலிக்கிறான். ஆனால்.. திலகா : ஆனால்...! வந்ததா பேரிடி? அண்ணா! என்ன அண்ணா அந்த ஆனால்... மதி: சோமநாதன் கொக்கரிக்கிறான். பராரி மகளாம் நீ பஞ்சையாம் நான். அந்தச் சீமான் மகனை, திலகா! வலை போட்டுப் பிடிக்கிறோமாம். திலகா: (கண் கலக்கத்துடன்) ஐயோ! என் களிப்பு கரு. கும் காலம் வந்து விட்டதா இவ்வளவு விரைவில். [மதிவாணன் திலகாவை அன்புடன் அருகே அழைத்து அணைத்தபடி.] மதி: மானத்தை இழக்கலாமா திலகா! மறக்குடியில் பிறந்தோம்! மணியில்லை-அணியில்லை. ஆனால்.நாம் என்ன ஏய்த்துப் பிழைக்கிறோமா? ஏவல் வேலை செய்து வாழ்கிறோமா? மாளிகை இல்லை-ஆனால்; இதோ மலர்த் தோட்டம். நமது உழைப்பின் உருவம். உழைக்கிறோம். பிறர் கட்டளை கேட்டு அல்ல. உருட்டி மிரட்டி ஊரை