44 சொர்க்கவாசல் காட்சி--30 இடம்: நடுநாட்டு மடாலயத்தின் வெளிப் புறம். இருப்: பெரியமடாதிபதி அருளாளர். ளம் நிலைமை: பல்லக்கு தயாராக இருக்கிறது. பெரியமடாதிபதி, கருணை உள் படைத்தவர் என்பதை முகக் குறி காட்டுகிறது. புறம் படத் தயாராக உள்ள, நடுத் தர வயதுள்ள மடாதிபதியின் முகம், மலர்ச்சியாக இருக்கிறது. மடாலயப் பரிவாரம் அருகே நிற்கிறது. முத்துமாணிக்கம், அரச மரியாதையைக் கொண்டு வந்து, பெரிய மடாதிபதிமுன் வைக்கிறான். பெரிய மடாதி பதி, அதைப் புறப்படும் மடாதி பதிக்குத் தரச் சொல்லுகிறார். அரச மரியாதையைப் பெற்று புறப்படும் மடாதிபதி மகிழ்கி றார்... பெரியமடாதிபதி அருளாளர்: அருமறையானந்தரே! உமது திருத்தொண்டு, நமது மதத்திலே படிந்து போயுள்ள மாசுபோக்கி,மக்களைச் சன்மார்க்கத்திலே சேர்ப்பிக்கும் வித மாக அமைய வேண்டும். எங்கும் புத்த மார்க்கம் பரவி விட்டது. மன்னர் பலர் புதிய மார்க்கத்தை ஆதரிக்க முன் வந்து விட்டனர். வேத மார்க்கம் மங்கிக் கிடக்கிறது. வேழ நாட்டு வேந்தன் வெற்றிவேலன், புராதன மார்க்கத்தை ரட்சிக்க முன் வந்தது நமது பாக்யம். தோணி கவிழ்ந்த போது தெப்பக் கட்டை கிடைத்ததுபோல வெற்றிவேலன் கிடைத்திருக்கிறான்.
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/44
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை