பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 சொர்க்கவாசல் ஊரார், ஆடவரும் பெண்டி ருமாக உள்ளனர். மதிவாணன் பாடுகிறான். இசைத் திறனுடன் பாடியது கேட்ட அருமறையானந்தர் பூரித்து, காரியக்காரனிடம் ஏதோ கூறிவிட்டு, மதிவாணன் அருகே அழைத்துப் பட்டாடை யும் பரிசும் தந்து அருமறை: பரமன் உனக்கு அரிய ஞானத்தை தந்திருக் கிறார். அவன் புகழ் பாடு; திரு அருள் நாடு; உன் இசையால் அஞ்ஞான இருள் நிச்சயம் நீங்கும். காட்சி-25 இடம்: மதிவாணன் மாளிகையில் ஓர்கூடம் இருப்: மதிவாணன், திலகவதி. கட்டி நிலைமை: பல பேழைகள். அவைகளைத் திறந்து பார்க்கிறான்; பூரிப் படைகிறான். தங்கக் கட்டிகள் உள்ளன. திலகாவைக் கூப்பிடு கிறான். ஒரு தராசு தொங்க விடப்பட்டிருக்கிறது. அதிலே ஒரு தட்டிலே திலக வதியை நிறுத்தி; மறுதட்டிலே தங்கக் கட்டிகளைப் போட்டு நிறுக்கிறான். நிறை சரியில்லை. கவலையுடன் திலகவதியை அனுப்பி விட்டு உலவுகிறான். அவன் செவியில்... . 'எடைக்கு எடை தங்கம். எடைக்கு எடை தங்கம்' என்று சோமநாதர் முழக்கமிட்ட வார்த்தை கள் விழுகின்றன. கவலையுடன் உலவுகிறான். மெல்லிய குரலில்... மதி: எடை குறைகிறது... குறைகிறது.