பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 சொர்க்கவாசல் (வெற்றிவேலன் முகத்திலே இலேசாகக் கோபக் குறி பணியாள் முழங்காலுக்குக் கீழே உள்ள பட்டையைக் கட்டியபடி இருக்கிறான்...] வெற்றி: சதிகாரர்களின் தொகை வளர்ந்து விட்டது. அப்படித்தானே? அமை: தொகை மட்டுமல்ல, துடுக்குத்தனமும். வெற்றி: (கோபமாக) வேழநாட்டிலேயே இந்த நிலை என்றால், மற்ற இடங்களிலே எப்படி இருக்கும் - சரி என்ன செய்தாவது சதிகாரக் கூட்டத்தை அழித்தாக வேண்டும். இழுத்துக் கட்டடா, முட்டாள்! வரவர, வறண்ட தலைப் பயல்களுக்கு மண்டைக் கர்வம் வளருகிறது. [ஒரு ஓலையைத் தருகிறார் அமைச்சர். அமை: (ஓலை தந்தபடி) இந்தக் கும்பலைப் பிடித்து அடைத்துவிட்டால், சதித்திட்டம் தவிடு பொடியாகும்! வெற்றி: இவர்களெல்லாம். அமை: தூண்டிவிடும் தலைவர்கள். வெற்றி: (ஓலையைப் படித்தபடி) நவரத்ன வியாபாரி, மந்திரமூர்த்தியின் மனைவி பூங்கோதை! இந்தப் பெண் ணுமா? அமை: பெயர்தான் வேந்தே, பூங்கோதை; புயல் காற்று-சொல், செயல். வெற்றி: சீமானின் மனைவி? அமை: ஆம்/சீமான்களை ஒழிக்க திட்டம் தீட்டுகிறாள். வெற்றி: (உரத்த குரலில்) பிடித்து அடையுங்கள் சிறை வில்—இந்தச் சதிகாரர்களை இன்றே-உடனே... (ஓலையை வீசி எதிய அமைச்சர் பிடித்துக் கொண்டு வெளியே செல்கிறார்.]