பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கவாசல் 65 அமை: புது மார்க்கம் புயல் போலக் கிளம்பிவிட்டது; பழைய முறை அழிந்துவிடும் போலிருக்கிறது. மாசிலா: நாம் காலம் அறிந்து பணிபுரியாவிட்டால் நிச்சயம் அழியும்... வெற்றி: கடுமையான சட்டம் இருக்க வேண்டும்... மாசி: போதாது வேந்தே! போதாது. மக்களின் மன மாசு போக வேண்டும். [பணியாள் வெற்றிவேலனின் இரத்தக் இரத்தக் கறை படிந்த சொருகுவாளைக் கழுவித் துடைக்கி றான்...] மடாலயத்திலே புதிய திட்டம் தயாராகிறது. அமை: அருமறையானந்தரின் உழைப்பு பலன் தரு கிறது. மாசி: (குழைவாக) வேந்தரின் ஆதரவு கிடைத்துவிட் டால் விதண்டாவாதிகளை ஒழித்துவிட முடியும்-சதி, தானாகச் சாயும். பணியாட்கள், அமைச்சருக்கும் மாசிலாமணிக் கும் பழரசக் கோப்பை தருகிறார்கள்...] வெற்றி: என் ஆதரவு எப்போதும் உண்டு. மாசி: (கோப்பையை ஏந்தியபடி) பிரச்சாரம் வேண் டும், புதிய மார்க்கத்துக்கு.. அமை: (கோப்பையைக் கீழே வைத்துவிட்டு) பணம். தானே தருகிறோம்... மாசி: கலை மூலம் நமது காரியத்தைச் சுலபத்திலே முடித்து விடலாம். வேந்தே! மதிவாணனின் மதுர கீதம், மக் களைச் சொக்க வைக்கிறது. பூ-156-சொ-3