பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 சொர்க்கவாசல் வேலை: நல்ல வேளை - வெளியூர் போயிட்டிங்களோன்னு பயந்து கொண்டே வந்தேன். புறப்படுங்க--அப்பாவுக்கு பெரிய ஆபத்து. முத்து: (திகைத்து) என்ன, என்ன! அப்பாவுக்கு ஆபத்தா? வேலை: ஆமாங்க... வேட்டையாடப் போனாரு. முத்து: அப்பாவா? வேலை: இல்லிங்க.. வில்வக்காட்டாரு அப்பாவையும் அழைத்துக் கொண்டு போனார். அங்கே அப்பாவை புலி அடித்து விட்டதாம். படு! முத்து: (கதறியபடி) ஐயோ, புலியா? புறப்படு! புறப் அவசர அவசரமாக உடையைச் சரிப்படுத்திக் கொண்டு கிளம்புகிறான்.) காட்சி 43 இடம் : அரண்மனையில் அமைச்சர் கூடம் இருப்: மதிவாணன், அமைச்சர் மதி: சிக்கலான காரியம். பழக்கமற்றவன் நான். பாடு வேன் -- பாடல் தீட்டுவேன்--அரசியல் நுட்டம் தெரிந்தவர் கள் செய்ய வேண்டிய காரியத்தை என்னிடம் ஒப்படைக் கிறீர். அமை: உன்னிடம் எனக்கு அவ்வளவு நம்பிக்கை மதி வாணா! மன்னருக்கு அந்த மங்கை கிடைத்தாக வேண்டும். வேழநாட்டின் எதிர்கால வாழ்வு அந்தத் திருமணத்தைப் பொறுத்திருக்கிறது. மதி: தூதுவர்கள் சென்றால் சுலபமாக முடிந்துவிடுமே! என்னால் என்ன ஆகும்?