பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கவாசல் காட்சி -- 1. இடம்: மதிவாணன் மலர்த்தோட்டம். இருப்போர்: திலகா, மதிவாணன்.... (வல்லியூரில் ஒருமலர்த்தோட்டம். தோட்டத் தின் நடுவே ஒரு சிறு வீடு. கவர்ச்சிகரமானதாக --கலையிலே நாட்டமுள்ளவனின் வீடு என்பதை விளக்கும் குறிகளும், சாதனங்களும் வீட்டிலே காணப்படுகின்றன. செடி கொடிகள் அழகாக,, ஒரு புறம் புறாக்கள்; மற்றோர் புறம் ஆட்டுக் குட்டிகள்; இன்னோர் புறம் கோழிக் குஞ்சுகள்: செயற்கைக் குளம். அதிலே வாத்துக்கள், மயில் -- புறாக்களுக்குத் தீனி தூவிக் கொண்டி ருக்கிறாள் திலகா --- சுறுசுறுப்பான சுபாவமும், களங்கமற்ற உள்ளமும் கொண்டவளாக காணப் படுகிறாள் - இனிய இசை கேட்டு ஒலி வரும் திக்கு நோக்குகிறாள் புன்னகையுடன்- மலரைப் பறித்த வண்ணம் பாடிக்கொண்டிருக் கிறான் மதிவாணன். மதிவாணன் பாடலைக் கேட்டு ரசித்தபடி திலகா அருகே வருகிறாள். அருகே வந்த திலகவதியிடம், பறித்த மலர் களையும், பூந்தோட்டத்தையும் காட்டுகிறான்: மதிவாணன். திலகவதி, அண்ணன் இசை கேட்டு இன்புறுகிறாள். எனினும் கருத்தைக் கேலி செய் வது போலக் குறும்பாகப் பார்க்கிறாள். அதை. உணர்ந்து கொண்ட மதிவாணன் பாடலைத் தொடர்ந்து பாடுகிறான். சலிப்புற்றவள் போலத்