பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 சொர்க்கவாசல் சோம: நீ நம்பல்லே, நான் சொன்னபோது- இதோ பார், புலி செய்த வேலையை. முத்து: புலியா? சோம. ஆமாம்! வில்வக்காட்டுப் புலியோட வேலை தான். வெளியே சொல்லாதே-- நீ அவன் மகளைத் திரு மணம் செய்து கொள்ள மறுத்துவிட்டாய். அவமானமாம் அவனுக்கு. அதனாலே இந்தக் கதி. முத்து: (கோபமாக)நாட்டிவே இருக்கிறானே இப் படிப்பட்ட கொடியவன். [சோமநாதனின் நிலைமை மோசமாகிறது. முத் துவைச் சேர்த்துக் கலங்கியபடி உயிர் விடுகிறார்] முத்து: (கதறி] அப்பா! அப்பா! பாவி நான்தான்! உங்களைக் கொன்றேன். 'காட்சி-45 இடம்: வில்வக்காட்டார் மாளிகை இருப்: முத்துமாணிக்கம், வில்வக்காட்டார், முரடர்கள், நிலைமை: கூடத்தில் முத்துமாணிக்கம் கோபமாகச் செல்கிறான். அங்கு இருந்த முரடர்களைக் கண்டு... முத்து: எங்கே வில்வக்காட்டார்? முர: அடே! சூரன் யாரு? புதுசா இருக்கே! மற்ற முர: இதுவா? புலி அடிச்சுப்போட்டுதே, கிழ சோம்நாதனை. அவனோட மகன். {மற்ற முரடர்கள் சிரிக்கிறார்கள். வில்வக்காட் டார் வருகிறார் உட்புறமிருந்து- முத்துமாணிக் கத்தைக் கண்டு கோபமடைகிறார்.]