பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1'. சொர்க்கவாசல் 93. நிலைமை: மதிவாணன் கழுத்திலே ஒரு பச்சைக் கொடியைப் போட்டு இழுத்தபடி, மரகதமணி விளை யாட்டுக் குரலில். மர: மாமா! எங்கேயோ போய்ப் பாடப் போறயாமே! அந்த ஊர்லேயிருந்து என்ன வாங்கி வரப் போறே? மதி: உனக்கு என்ன வேணும்? சொல்லு கண்ணே! தந்தப் பொம்மை வேணுமா? ஆடும் குதிரை வேணுமா? மர : இதெல்லாம் இங்கேயே இருக்கே மாமா! எனக்கு ஒரு ராஜாத்தி பொம்மை வாங்கி வர்றியா? மதி: உனக்கு ராஜாத்தி பொம்மை வேணும்; உங்க அப்பாவுக்கோ ராஜாத்தி அம்மாவே வேணுமாம். மர: அப்பா என்ன, சின்ன பாப்பாவா, பொம்மை கேட்க! எனக்குத்தான் வேணும். மதி: ஆகட்டும் செல்வம், வாங்கி வர்ரேன். [குழந்தை கன்னத்தில் முத்தமிட்டுவிட்டுக் கிளம்புகிறான்; மாசிலாமணி எதிர்ப்படுகிறான்.) மாசி: மதிவாணா! சோவை நாட்டுக் கலை விழா விலே உனக்கு வெற்றி கிடைக்கும். அருமறையானந்தர் ஆசிர்வதித்து இருக்கிறார். மதி: கலை வேலை மட்டுமல்லவே! வேறோர் பணியும் தந்திருக்கிறார். அமைச்சர், மாசி: கேள்விப்பட்டேன். அதிலென்ன கஷ்டம்? அமைச்சரும் உனக்கு ஒரு பணி தருகிறார். மதி: (திகைத்து) அவர் என்ன பணி தருகிறார். மாசி: சோலைநாடு புது மார்க்கத்துக்கு ஆதரவு தரு கிறதாம். ஏன்? எந்த அளவு? இது தெரிய வேண்டும். மதி: (சலிப்புடன்) சரி... விசாரிக்கிறேன்.