பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உற்றதொரு தமிழகத்தில் உயர்வே வேண்டில், உழைப்பவர்கட்கு உயர்வளிக்கும் உன்னத வாழ்வு வேண்டில்

கொற்றமெலாம் மக்கட்கு ஆக வேண்டில், காஞ்சி நிலக் கருவூலம் அண்ணனே வேண்டும் நீயே! பட்டுடுத்த மாட்டாய் நீ! பகட்டாக வாழ விரும்பாய் நீ"

பவளச் செவ்வாய் வெற்றிலையால் சிவக்கின்ற இதழுடை யோய் நீ!

பாதம் நோவ, இட்டடியிட்டு ஊரூர்ஓடி, கட்டவிழ்ப் பாய் கொள்கையை நீ! விட்டொழிய மாட்டாய் குறள் வாழ்வை நீ! விலை பேச முடியாது உன்னையே நீயே!

வட்ட நிலா வடிவம் கொள் குடையின் கீழ், சுட்ட செழும்பொன் சுடரவிழ்க்கும் கோன் நீ! திருப்பெயராம் உன் மூவெழுத்தைச் செப்பாராகில்; திரிவண்ணந் திறங் கொள்கை பேசாராகில்: ஒரு காலும் இரு வண்ண கொடியினை ஏந்தாராகில்; உன் கூட்டத் தேனமுதத்தை உண்ணுராகில்; அரசியல் நோய்கெட உம்மை அணுகாராகில்; உன் அணிவகுப்பில் முன் நிற்க உந்தியோடி வாராராகில் பெரு நோய்கள் அரசியவில் தொத்தி செத்துப் பிறப்பதற்கே தொழிலாகிப் பிறந்தார் என்பேன்! குறளான, இலக்கியக் குன்ருன, கற்பனை ஊர்தியான, தத்துவக் கடலான தூற்றல் நஞ்சை உண்டான,

நாடகத் துறையானை, நல்ல பகுத்தறிவால் குறை தீர்ப்பான;

இன்னமுத சொல்லாட்சி ஈவான, நடமாடும் இலக்கியத்தானை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/100&oldid=564544" இலிருந்து மீள்விக்கப்பட்டது