பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 24

உனது வழக்கமான செம்முகத்தை எனது சிந்தனைக் கிளிகள், கொவ்வைப் பழம் என்று கடிக்க ஆரம்பிக்கின்றன! என் தாக்கில் விளையாடும் ஒளியலைகள் எங்கோ இருந்து வந்ததல்ல!

உன்னை க் கண்ட பிறகு-அது மகிழ்ச்சியால் நெளிந்த பிறகு ஏற்பட்ட ஒசையாகும்!

கதிரவனே, உனது புகழின் ஆழத்தை உலகைச் சுற்றி யிருக்கின்ற கடலும் கொண்டிருக்கவில்லை.

உனது பெருமையின் உயரத்தை, உலகின்மேல் கொப்பளம்போல் குவிந்திருக்கும் மலைகள் கொண்டிருக்க

உனது விரிவு, திக்கை உடைத்துக் கொண்டு வெளியே செல்லுகிறது:

உன்னுடைய விரிந்த விசாலத்தில், நான் ஒரு சொட்டு இயற்கையாகவே இருக்கின்றேன்.

என்னைக் கடையேற்ற ஆயிரங் கோயில்களைக் கட்டி யவன் நீ! ஒரு நாளைக்குப் பத்தாயிரம் தடவைகள் பூசை செய்தவன் நீ

நான் படைத்த பூக்களின் வண்ணங்களை, என் எண்ணம் ஏன் கவனம் வைக்கவில்லை? சுவையாகப் படைத்த கணிகளின் சுவையை, நான் அறிந்தவனல்ல!

இவ்வளவையும் நீ செய்த பிறகும் நான் கடைத்தேற முடியவில்லை!

மடையுடைத்துக்; கிளம்புகின்ற உன்னை மனக் கண்ணில் கண்ட பிறகுதான், என் அகக் கண் திறக்க ஆரம்பிக்கின்றது!

ஏ, சுடரொளி! மேகம் மூடிய வானத்தின் கீர்த்தியே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/125&oldid=564569" இலிருந்து மீள்விக்கப்பட்டது