பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.39

அது இலக்கியத்தில் இருந்தால் அதனைப் புலமையிலே சேர்ப்போம்.

அது வானத்தில் இருப்பதனால் நிலவு என்கிருேம். அது அரசியலில் இப்போது வந்திருக்கிறது. ஆதலால் அதனை அறிஞர் என்று அழைப்போம். இரக்சமற்ற மனிதக் கண்கள் அந்த நிலவைச் சபிக்கின்ற நேரத்தில் அதுதன் குளிர்ச்சியைவிட்டுக் கொதிப்படைய வில்லை.

ஊமைக்கும் அதியற்புதமான கற்பனையைக் கொடுக்கக் கூடிய சக்தி நிலா என்று கவிஞர்கள் கூறுகிரு.ர்கள்.

உடம்பெல்லாம் தொழு நோய்ப்பற்றிய ஒருவன் அந்த நிலா ஒளியில் செல்கிற நேரத்தில், அவன் பாதி குணமாகி விடுகிருன்.

இல்லையென்ருல் அவன் உடல் பூராவும் தங்கமாய் மின்னுவதைப் பார்க்கிருேம்.

மண்ணிலே புதையுண்ட தங்கத்தை வாரிக்கொள்வதைப் போல், விண்ணிலே புதைந்த நிலவைக் கண்களால் வாரிக் கொள்கிருேம்-கருத்தால் நிரப்பிக் கொள்கிருேம்.

பேரறிஞர்களை நிலவுக்கு ஒப்பிடுவதின் மூலம்நம்முடைய ஆசையைக் காட்டிக் கொள்கிருேம் என்று நினைக்கக்கூடாது. உயர்ந்த இடத்தில், ஒருவன் சென்ருல் அவன் சூரியனைப் போல் எரிச்சலாக இருப்பான். ஆனல் பண்பட்ட அறிஞர்கள் உயர்ந்த இடத்திற்குச் சென்ருலும் எரிச்சலாய் இருக்க ińsst. L-f; for 56Y.

உயர்ந்த இடத்தில் எரிச்சலை ஊட்டாமல் இருப்பது நிலவு; ஆகவே அவர்கள் ஒரு நிலா.

இப்படி வாழ்க்கையின் தத்துவத்திற்கு ஒட்டி வருகின்ற ஒரு நிலா பலருடைய இரகசியத்தை அறிந்ததாகும்.

கோடி மக்களின் அனுபவத்தை உணர்ந்ததாகும். அதன் அறிவின் ஆழத்தை அவனுள் இறங்கி யாரும் காணவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/140&oldid=564584" இலிருந்து மீள்விக்கப்பட்டது