பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

ஜனநாயக நாட்டின் எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட் உங்களில், அதன் தொண்டர்களது உடம்பு, பட்ட அடி உதைகளால் படுகாயங்களாவதைப் போல், எனது உடம்பு கீழே விழுந்த போது படுகாயங்களாகி விட்டன.

இருந்தாலும் எனது உடலை அந்த சரிவுகளால் அழிக்க முடியல்லே தாயே!

உனது சாகாவரம் பெற்ற இலக்கிய ஏடுகளில் ஒன்று எனக்குக் கவனம் வருகிறது அம்மா.

சரியான பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவன் "செந்நாய் சீறிலுைம்-சிறுத்தைகள் உறுமினலும்-கலங்கத் தேவையில்லை,” என்பதே அது.

எனது பாதை பள்ளங்களும்-மேடுகளும் நிறைந்தது என்ருலும் நீரின் பரப்பிலே அவை சமமாகவே தெரிகின்றன

நான் வாழ்க்கையில் ஒவ்வொரு தடவையும் மேலிருந்து கீழே விழும்போது தான், மேடும் பள்ளமும் தெரிகிறது!

என் உடலின் மீதிருக்கும் வண்ணத்தைப் பார்த்து நீ ரசிக்கிருயா அம்மா!

அவற்றை நீ தானே துரிகையால் தொட்டு எழுதிஞய்?

அளவிட முடியாத உயரத்தைக் காட்டுகின்ற வண்ணம் நீலம்.

அந்த நீலத்திற்கு நீ கொடுத்த விமர்சனம் திருக்குறள் அல்லவா?

அதனுல் என் உடல் முழுவதும் எழுதி வரைந்தாய்!

அதன் ரசனையில் நீ இருக்கும் போதே நான் கீழ் மேலாகவே வாழ்க்கையை மாற்றிச் செல்கிறேனே!

தாயே! தர்மத்தின் திக்கில் இருப்பவளே! நீதியின் நிழலை விரவும் தருவே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/147&oldid=564591" இலிருந்து மீள்விக்கப்பட்டது