பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 1

என்னுடைய எ ண் ண ங் க ள் எதையோ ஒன்றை அறிவதைப் போல எண்ணித் துடித்தன :

எதையோ ஒன்றை நான் பெறுவதும், அதை இழக்கத் தயாராக இல்லாததும் போன்ற உள்ளுணர்வு எனக்கு ஏற்பட்டது :

தன்னம்பிக்கையை நான் தழுவிக் கொண்டேன். சோர்வோ-தளர்வோ என்னே நாட அச்சப்பட்டன :

வானவில்லின் விளிம்புகளில் நின்றவாறே நான் வையத்தை நோக்கினேன் !

நான் உயரமானவன்! மிக மிக உயரமானவன்! உலகத்தை விட உயர்ந்தவன்-என்ற தற்பெருமை கொண்டேன் !

பூமியின் கரடுமுரடான முகத்தைக் கண்டேன். கிண்டல் செய்தேன் !

இவ்வாறு ஒரு நொடியில் நான் நினைத்தேன் ஆனல் மறுநொடியில்...!

வில் உடைந்தது எந்தப் பூமியை நான் ஏளனம் செய்தேனே, அதே பூமியிடம் நான் சரளுகதியடைந்தேன். தலே குப்புற வீழ்ந்தேன் கீழிருந்தவாறே வான நோக்கினேன் !

வெற்றி பெற்றவனிடம் தோற்றவன் தனது தோல்வியை மறந்து எரிச்சலால் ஏசுவதைப் போல, நானும் வானே ஏசினேன் !

என்னைச் சூழ்ந்து நின்றவர்கள் என் அறியாமையைக் கண்டு இரங்கினர்கள்.

நான் மட்டும் என் குற்றத்தை மறந்தேன். ஆனலும் முயற்சி திருவினையாக்கும் என்ற குறள் எனக்கு மீண்டும் புதுவலிவை ஊட்டியது :

ஏறிய தகுதி இறங்கிய பிறகு-ஒருவன் மனம் போன வாறு பேசுவது-மனித இயற்கை என்பதை ஒருவாறு உணர்ந்தேன். வானவில்லை மீண்டும் நான் அடைய முடியாதுதான், அதனல்-அதன் பெருமையை உணர்ந்தபடியே சிந்தித்தேன் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/32&oldid=564476" இலிருந்து மீள்விக்கப்பட்டது