பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£58

தாயே! நீ இருக்கும் போது நாங்கள் ஏன் நலியப் போகிருேம்!

உன் பார்வைதான் எம்மை அடிக்கடி மனிதனுக்கிவர அறிவுரையாக உதவுகிறதே!

எங்களுக்கு தீ எவ்வித குறை நிறைகளையும் வைக்க வில்லையே!

ஒன்றுபட்டு வாழ உனது பாசமெனும் வேறு ஊட்டி விட்டாயே அம்மா!

உணர்ச்சியை

தாயே! எனது வாழ்நாளில் என்னை எத்தனை உருவங் களாக அமைத்தாலும் உனது எண்ணத்தையே நான் எங்கும் எதிரொலிப்பேன்!

பாலைவனத்தில் சிறு மணலாக என்ன ஆக்கு! கோடியில் ஒருவளுகச் செய். உன் கை வண்ணத்தின் சிறு உருவம் நான்:

கடலோரத்தில் கிளிஞ்சலாக என்னை உலவ விடு,

உன் கலைத்திறனின் உருவமாகக் காட்சியளிப்பேன். மலயென என்ன ஆக்கு. உன் வான்புகழை ஏந்திக் கொண்டே இருப்பேன்.

நீ இயற்கையில் இளமையோடிருப்பவள்.

நான், உன் அமைதியில் பிறந்தவன்! உன் மோனத்தில் கருவானவன்!

உன்னிடமிருந்து என்னைப் பிரிக்க முடியாது. உன் னைப் பிரதிபலிக்க நான் எப்போதும் காத்திருக் கிறேன்.

தனிப்பட்டவளல்ல நான்; உனது ரத்தம் தாயே ரத்தம்: என்னைப் புகழ்வோரெல்லாம் உன்னைப் புகழ்கிருர்கள்: நான் பெறும் வாழ்த்துக்கள் அத்தனையும் உனக்களிக்கும் வாழ்த்துக்கள்! છઠ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/69&oldid=564513" இலிருந்து மீள்விக்கப்பட்டது