பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137


இரு பக்கத்து நெற்றிப் பொட்டையும் அழுக்தப் பிடித்துக்கொண்டு அண்ணுந்து நோக்கிய வேளையில், அவன் பார்வையில் புதுக் கட்டிலும், புதிய பட்டு மெத்தை - தலையணைகளும் ஊர்க்தன. அனைத்தும் புதுப்பிக்கப்பட்ட மூவர்ணச் சித்திரங்களென ஆடின. அவனே ஆடவைத்தன. மஹேஸ்வரியின் அடங்காத துன்பத்தின் ஒலிச் சிற்றலைகளை அடக்கிவிட எண்ன மிட்டான் அவன். அண்டினன். அவளுடைய கண்ணி ரைத் துடைத்தான். அதுசமயம், சுவர்ப்பக்கம் அவன் திருஷ்டியை ஒட்டினன். மஹேஸ்வரியின் பெற்றாேர் கள் படத்தில் அடங்கிக் காணப்பட்டார்கள். அடுத்த தாக, இன்னெரு படம். அது மிகவும் அந்தமாகயிருந் தது. மூன்றுகால் சைக்கிளில் அமர்ந்தபடி மஹேஸ்வரி காட்சி கொடுத்தாள்பத்து வயசுச் சிறுமி மஹேஸ்வரி!

  • பற்றி ! ...??
  • கான் அழிந்து விட்டேன், அத்தான் !’
  • அப்படியெல்லாம் சொல்லாதே, மஹறி... மனித மனத்தின் பலஹீன உணர்ச்சிகளைத் துச்சமென எண்ணி, அவற்றைச் சொடுக்கி ஓட்ட விழைந்தவன் போன்று அவன் பேசினன். சித்தம் என்பது கைப் பிள்ளை விளையாட்டுப் போலும்! அது ஒன்றை கினைத்து, பிரிதொன்றைச் சித்திரித்தது. மலர்க்க2ண வீசி விளையாடிய ரதி-மன்மதன் விளையாட்டு ஏடு விரிந்தது. நீயும் கானும் ஒரு சில நிமிஷங்கன்தான் ரதி-மன்மதன் வேஷம் போட்டுக் கொண்டோம். எல்லாம் பொய் வேஷங்கள் ...இதோ பார், ஒவியனின் துரிகையில் வாழுகிறார்கள் மாரன் தம்பதி! வாழும் காதலுக்கு வடிவு கொடுத்து விளங்கும் இவர்களை உனக்குப் பிடிக்கவில்லையா? சொல், மஹேஸ்வரி!...”