பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுக் : அனு : அனு : அண்ணா! இப்படியே செயலற்று நின்றால் எதை யும் செய்ய இயலாது. அண்ணியைத் தேடும் முயற்சியில் நாம் திண்ணமாக நிற்க வேண்டும். இதுதான் சபரி காட்டிய மலை. அதோ பார். வானரர் நம்மைக் கண்டு அஞ்சி அகலுகின்றார்கள். (மற்றோர் புறம்) (கக் கிரீவன் உள்ளே வருகின்றான். அனுமன் அவனைத் தொடர்கிறான்) யார் இவர்கள்? நம் பகைவரோ? வாலி ஏவலினால் தான் வந்திருக்க வேண்டும். வரித்த சிலையர், மலை யனைய தோற்றத்தர்; இவர்கள் யாராக இருக்கக் கூடும்? தேவர், தானவர், அல்ல அல்ல; தாழ் சடைக் கடவுள்; அதுவும் அன்று இவர் போர்த்தொழிலர்; தவமெய்யர், கைச்சிலையர் தருமத்தின் காவல ராகக் காணப்படுகின்றார்கள். யாராக இருக்கக் கூடும்? நானே சென்று அறிந்து வருகினறேன். நீங்கள் ஒதுங்கி இருங்கள். (வேறு புறம்) (அனுமன் இராம இலக் குவரை அணுகி அன்பினால் அவர்களை நோக்குகின்றான்) (தனக்குள்) வேங்கையும் களிறும் வேகம் அடங்கி நிற்கின்றன. மயில் முதல் பறவைகளெல்லாம் இவர்க்கு விரிசிறை மறைத்து நிழலைத் தருகின்றன. எழில் முகில்கள் இவர்க்கு நீர்த்திவலை சிந்திக் குளிர்விக்கின்றன. கற்களும் மலர்களைப் போல் கனிகின்றன. புல்லும் மரமும் இவரைக்கண்டு சாய்ந்து பணிகின்றன. இவர்கள் தருமத்தின் உரு வாகக் காட்சி அளிக்கின்றனர். இவர்களைக் காணுந்தோறும் என்பு நெக்கு உருகின்றது. அள வற்ற காதல் என் பால் தோன்றுகின்றது. அன்