பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 இராமன்: வசிட்டர்: இராமன்: சீதை: இராமன்: சீதை: சாவதில் பொருத்தம் இருப்பதாகத் தெரிய வில்லை. சோகம்தான் அவர் உயிரைப் பிரித்துவிடும். அதன் வேகத்தை அடக்குவது தங்கள் கடமை; அதைச் செய்து முடியுங்கள். மன்னன் இடரை நீக்குதல் என் கடன். உண்மை தான். முயல் கிறேன். வெற்றி பெறுவேன் என்று கூறமுடியாது. இந்த நாட்டில் ஒவ்வொருவரும் தன் கடமை உணர்ந்து செயலாற்றுவர். வசிட்டனும் தன் கடமையினின்று நழுவமாட்டான். காட்சி: 11 இராமன், சீதை மறுபடியும் சொல்கிறேன் கேள். நான் மட்டும் செல்கிறேன். என்னைத்தான் போகச் சொன்னார்களே தவிர உன்னைத்தான் என்று சொல்லவில்லை. என் அத்தான் என்னத்தான் சொன்னாலும் கல் தடம் கண்டு நான் வருவேன்; நீ வருந்தாதே நில் நில் இந்தச் சொல் . நீ வருந்தாதே. நில் இதுவா சொல். அன்னை சொல்லுக்கு மதிப்புக் கொடுத்து ஆணை ஏற்று நடக்கின்றீர். நானும் பெண்தானே. என் சொல் கேட்டு என்னையும் உம்மோடு வர இடம் கேட்கின்றேன். நான் மட்டும் என்ன தங்களுக்குச் சுமையா? பட்டுப்புடவை