பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 கைகேயி: வசிட்டர்: கைகேயி: வசிட்டர்: கைகேயி: யில் விழப் போகிறாய்! நான் உயரத்தில்தான் நிற்கின்றேன். நீங்கள் தான் சரிந்து கீழே விழுகின்றீர். மெதுவாக விழுந்தால் அடிபடாது. இல்லாத மரபைப் படைக்கின்றாய். மூத்தவன் இராமனுக்கு அரசை நல்கிவிடு. உன் கண வன் உயிரும் நிற்கும். இதுதான் மனுநெறி, முன்னையோர் நெறியும். அப்பொழுதுதான் நீ புகழைப் பூணுவாய். - மன்னவருக்காக மன்றாடும் மாண்புடையீர்! நானா இராமனைக் காட்டுக்குப் போ என்றேன். மன்னவன் வாய்மொழி. மறக்க வேண்டாம். நானா சாகச் சொல்கிறேன். அவரே அந்த வாய்மையைக் காப்பாற்ற முடியாமல் வேதனைப்படுகின்றார் ஒன்று மட்டும் உறுதி. வாய்மை பிறழ்ந்து என் வரத்தைப் பொய்யாக்கினால் கேகயன் மகள் உயிர் வாழாள். மன்னவனை மயக்கிப் பொய் யனாக்கிவிடலாம் உங்கள் சட்டங்களைக் காட்டி என்னை மட்டும் பொய்ப்பிக்க ஆயிரம் வசிட்டராலும் முடியாது. என் இரண்டு வரமும் செயல்பட வேண்டும்; இல்லையெனில் நான் மடிந்து விடுவேன். நான் சொல்லு கிறேன். உன் கணவன் இறப்பான்; உலகம் உன் போக்கை ஏற்காது; பழி நின்று நிலை பெறும். பாவ மும் உண்டாகும். இதற்குமேல் நான் என்ன கூறமுடியும்? கூறத் தேவையில்லை. இதைத் தவிர வேறு உமக்குப் பேசவும் தெரியாது.