பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 பெற முடியாத நிலைமை ஏற்படுகிறதே என்று தான் வருந்துகிறேன். அவன் கையால் நான் ஈமக் கடனும் பெறாத நிலையை அடைகின்றேன்; அது தான் நான் ஏற்கும் கொடுமை. மகுடம் புனை என்று சொல்லி இன்று சடை புனை என்று சொல்லுகிறேனே. இம் முப்பிடை என்னை வெறுத்துப் பிரிகின்றான் இனி வாழ்நாள் வேண்டேன். எனக்கு முன்னால் அவன் காடு அடையமுடியாது அவன் சேருவதற்குள் நான் போய்ச் சேர்ந்து விடுவேன். சீதையின் கைகளைப் பிடித்து மணம் செய்து கொண்டு நாட்டிடைக் கண்ட நான், அதே கைக ளைப் பிடித்துக் காட்டுக்குச் செல்லும் காட்சி யையா காண வேண்டும். அதற்கு நான்தானா கார ணம் ஆக வேண்டும். கள்ளக் கைகேயிக்கு நாட்டையும் வாழ்வையும் கொடுத்துப் புகழைக் கைக்கொண்ட வள்ளல் அல் லவா அவன். அந்த வள்ளல் தன்மை என் உயிரை மாய்க்கிறது. மாய்த்துக்கொண்டே யிருக்கிறது. நான் அவனைக் காட்டிற்கு அனுப்பிவிட்டு இக் கைகே யின் முகத்திலா விழிக்கச் சொல்கின்றாய். மகனைப் பிரிந்தேன்; இப் பழியைத் தாங்கி நான் வாழவே ண்டும் என்பதை இராமனே விரும்பமாட்டான். என் மகன் மேல்தான் உயிர் வைத்திருக்கின்றேன். என் உயிர் மேல் எனக்குக் காதல் இல்லையே. அணியும் மணியும், பூணும் பொன்னும், சிறப்பும் சீரும், திருவும் உருவும் தெரியக்காணக் கொடுத்து வைக்காத நான், முருட்டு ஆடையும் மானின் தோலும் அணிந்த தோற்றத்தையா காண வேண்