பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 கான கம் புக உய்த் தேன் என்று கூறுவதா? இராமனை உடன் திருப்பி அழைத்து வந்தேன் என்று சொல்லுவதா? உங்களை விட்டு நான் எப்படித் திரும்புவேன். மலரினும் மெல்லிய அடியை உடைய உங்களைக் காட்டில் விட்டு நான் மட்டும் திரும்பித் தேரில் போவதா? பழைய நண்பினன் நான்; கல் மனம் படைத்த நான் உம்மை வன்புலத்தில் அனுப்பித் தென் புலக்காலனின் தூதுவனாகச் செய்தி சொல்லத் தசரதன்பால் செல்வதா? நால்திசை மாந்தரும் நகரமக்களும் தேற்றிக் கொணர்வர் உன் சிறுவன் தன்னை என்று ஆற்றியிருக்கும் அரசனை, வெய்ய என் கூற்றுறழ் சொல்லினால் கொலை செய்வதா! வேள்வி செய்து அரிதின் பெற்ற உன் சிங்க ஏறு அகன்றனன் காட்டிற்கு என்று செப்புவதா? இந்தச் செய்தியைச் சொல்லி என்னினும் கேகயன் நங்கையே சிறந்தவள் என்ற நிலைமையை உண் டாக்குவதா? அவள் காட்டுக்குப் போக என்று கேட்டாள். அச்சொல் அவன் உயிரைப் போக்க வில்லை. போய் விட்டான் என்ற சொல்லைச் சொல்லி மன்னனின் உயிரைப் போகச் செய்வதா. அவள் சொல் அவனைத் துடிக்க வைத்தது. என் சொல் அவனைச் சாக வைத்தது என்னும் பழி யைத் தாங்குவதா? இராமன்: (அவன் கண்ணிரைத் துடைக்கின்றான்) அறம் பெரிதா? நும் துன்பம் பெரிதா? எண்ணிப்பார். வீரம் என்பது பகைவைரைத் தாக்கிப் புண்படுத் துவது அல்ல இறப்பினும் திருவெலாம் இழப்ப எய்தினும் அறம் துறக்காதவரே உண்மையான வீரர். நான் பிறந்ததால் இம்மன்னர்குலம் அறத்தி னின்று வழுவவேண்டுமா?