பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 காட்சி 17 கைகேயி, கூனி கூனி அம்மா, என்னால் வெளியே தலைகாட்ட முடிய வில்லை. இந்தக் கூன் இதற்காகவே அமைக்கப் பட்டது போல் இருக்கிறது; தலையை நிமிர்த்துப் பார்க்கவே முடியவில்லை. கைகேயி: கூனி: கைகேயி: கூனி: என்ன நகைச்சுவையா! அவலத்திலும் நகைச்சுவை காண்கிறாயே. யாராவது சிரிக்கிற்ார்ளா என்று பார்க்கி றேன். சிரிப்பதையே இந்த ஊரில் மறந்து விட்டார்களே. இவ்வளவு தூரம் இந்த ஊர் பாழாய்ப் போகும் என்று எதிர் பார்க்க வில்லை. ஒவ்வொருவரும் தசரதனைப் போலவே காட்சி அளிக்கின்றனர். சாவு விழுந்ததைப் போல் இருக்கிறது. இந்த நாடு. அவர்கள் விம்மி விம்மி அழும் ஒசை. காது கொடுத்துக் கேட்க முடியவில்லை. இரண்டு சொற்கள் விடாமல் ஒலிக்கின்றன. கேகயன் மகள் கூனி இந்த இரண்டு சொற் கள் அவர்கள் பழிப்புரையில் மாறி மாறி ஒலிக்கின்றன. அணிகல மும் மங்கலமும் தம் கூந்தல் இழக்க மாதர்கள் புடைபெயரக் கண் சிவந்து அடி சிவந்து பதைத்துப் பரித வித்துத் தெருவில் வந்து நின்று விட் டார்கள். கொடி சாய்ந்து துவண்டது போல விழுந்து அழுகின்றார்கள்.