பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 அரசன் அருளிலன்; அறத்தைத் கைவிட்டுப் புரட்சி செய்வோம் என்று கதறுகின்றனர். கைகேயி: அழட்டும்! மன்னன் அழுகைக்கே செவி கூனி: சாய்க்காத நாம் இந்த மாநிலம் அழு கிறது என்பதற்காக. அதுதான் சொல்ல வந்தேன். அவலத்தின் மடியில் நாம் தவழ்ந்து விளையாடுகின்றோம் என்று சொல்லத்தான் வந்தேன். கைகேயி: வசிட்டரும் தான் சொல்கிறார். 'கிள்ளையொடு பூவை அழுத; கிளர்மாடத்து உள்ளுறையும் பூனை அழுத உருவறியாப் பிள்ளை அழுத, பெரியோரை என் சொல்ல! வள்ளல் வனம் புகுவான் என்றுரைத்த மாற்றத் தால் என்று ஒரு கவிதையே பாடிவிட்டாரே. கூனி ஆவும் அழுத; அதன் கன்று அழுத அன்றலர்ந்த பூவும் அழுத, புனல்புள் அழுத, கள்ளொழு கும் காவும் அழுத களிறு அழுதன; கால் வயப்போர் மாவும் அழுதன; அம்மன்னனை மானவே. என்று நானும்தான் ஒரு கவிதை சொல்ல முடியும். கவிதை எழுதுவோர் க்கு இதுதான் நல்ல வாய்ப்பு. அழுது அழுது ஒய்ந்து விடுவார்; யாரும் இவர்களைத் தடுக்க முடியாது. காட்டை இராம னுக்குக் கொடு என்றுரைத்த கைகேயியும் கொடிய கூனியும் தவிரக் கொடியவர் பிறர் இல்லை என்று பேசுவதுதான் என்னால் தாங்க முடியவில்லை. கைகேயி: இதையெல்லாம் கண்டு கேகயன் மகள் கலங்காள். அறியட்டுமே இந்த மாநிலம்; என் காதிலும்தான் பல சொற்கள் படுகின்றன. 'மண் செய்த பாவம் உளது