பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 மட்டும் இகழ்ச்சி அடையும்படி செய்யலாமா? தந்தை இறந்துபடுவான் என்று தெரிந்ததும் அவன் திரும்பவில்லை என்றால் அதற்குக் காரணம் என்ன? நிச்சயமாக நான் அரசாள்வேன் என்று கருதித்தானே அவன் திரும்ப வில்லை. எனவே, அவனும் நான் ஆட்சி செய்யப்போகின்றேன் என்று உறுதியாக நம்பியிருக்கின்றான். இந்தப் பழிச்சொல்லுக்கு நான் ஆளாக வேண்டுமா? கைகேயி: சொல்; அது பழியா புகழா அதைப்பற்றிக் பரதன்: கவலைப்பட்டால் நடக்காது. கடமை உனக்குக் காத்து நிற்கிறது. வரம் உன்னை உயர்த்தி நிற் கிறது. இதை மறுக்க, எனக்கு உரிமை இல்லை எனலாம். நீ செய்த தவற்றுக்கு நான் உடந்தை என்று உலகத்துக்குக் காட்டச் சொல்லுகிறாய். அவன்கீழ் அடி பணிந்து அடிமையாகக் கிடக்க வேண்டிய தம்பி, அவனைத் துரத்திவிட்டு ஆட்சிப் பீடத்தில் அமர்வதா? நினைக்கவே முடியாத செயல். நான் இன்னமும் உயிரோடு வாழ்வது பொருந்தாது. என் உடன் பிறந்தவன் கையே இலையாகப் புல்லடகு உண் கின்றான். நான் கலமேந்திச் சோறும் நெய்யும் உண்டு மகிழ்வதா? இந்த உலகம் என்ன நினைக் கும்? வில்லார் தோளான் மேவினன் வெங்கானகம், இதைக் கேட்டுத் தந்தை துஞ்சினார். இவ ற் றை யெல்லாம் கண்டு நஞ்சே அனைய உன்னைக் கொல்லாமல் நிற்கின்றேன். உன் பழியாலே குறை வுற்றேன். மேலுக்குப் பிறர் மெச்சிக்கொள்ள அன் புடையவன் போல் அழுகின்றேன். நீ செய்த செயலைப் பாரோர் கொள்ளார். நானோ உயிரைப் பேணிப் பழியைத் தாங்கேன். எதனாலும் இந்தப் பழி தீராது. திருமகளும் நில்லாள். இவ்வளவு அறி வுக்குரிய சிந்தனை உனக்கு எப்படித் தான் பிறந்