பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசிட்டர்: பரதன்: வசிட்டர்: பரதன்: வசிட்டர்: பரதன்: 149 போதுமாம். மன்னவன் ஆணை அது. மறுக்க முடியாதே. முடியும். நான் போய் இராமனை எப்படியும் அழைத்து வந்து என் தந்தை செய்த கொடுமை யையும் தாய்செய்த சூழ்ச்சியையும் நிமிர்த்திச் செம்மைப்படுத்தப் போகிறேன். இதை யாரும் தடுக்க முடியாது. எதுவும் முடியவில்லை என்றால் இலக்குவன் பெற்ற பேற்றினையாவது நான் பெற வரம் வேண்டுவேன். இதோ புறப்பட்டுக் கொண்டே இருக்கிறேன். நாடே உன் பின்னால் புறப்படும். இனி அயோத்தி காடு ஆகப்போகிறது. காடு அயோ த்தி ஆகப்போகிறது. வேறு வழி இல்லை. இராமன் இருக்கும் இடம்தான் நான் இனி இருக்கும் இடம். நான் தனியே போகிறேன். யாரும் பின்பற்ற வேண்டாம் நீ இப்பொழுது மன்னர் மன்னன். இந்த நாட்டுச் சக்கரவர்த்தி. இது மன்னனின் ஆணை. இதை மறுக்க முடியாது. பரதன் போகிறான் என்றால் நாட்டு மன்னன் போகிறான் என்பது பொருள். சேனையும் யானையும் எல்லாம் உன் பின் தொடரும்; இதைத் தடுக்காதே. அத்தனையும் இராமன் திரும்பி வரும்பொழுது அவனுக்குத் தேவைதான். தாழிரு சடைகள் தாங் கித் தவம் மேற்கொள்ளும் எனக்கு இவை தேவை இல்லை. மன்னர் மன்னன் இராமன் திரும்பி வரும்பொழுது அவனுக்குப் பயன்படட்டும். வந்து போகட்டும் நான் மட்டும் தவத்தின் கோலம் ஏற்பேன். மணிமுடிக்கோலமே எனக்கு வேண்