பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூனி: கைகேயி: கூனி: 153 அழியாப் பெயர் இவன் பெறவேண்டும். என் மகன் உலகம் போற்றும் உத்தமன் என்ற பெயர் பெற்றால் போதும். உன் வாழ்வு. கருகித்தான் போகும். கனி செழிக்கும். புதிய குலை ஈன்றதும் பழைய வாழைச்செடி அழிந்து போகும் அடியோடு முரிந்தும் போகலாம். அழுகலைப் பெறும். இஃது இயற்கையின் நியதி. அந்த அழுகல் மரம் தான் புதிய மரம் விளை வதற்கு உரமாக அமைகிறது. தசரதன் இறக்க வில்லை என்றால் பரதன் புகழை இந்த மாநிலம் உணர்ந்திருக்க முடியுமா? இராமன் காட்டுக்குச் சென்றதால்தான் அவனும் புகழ் அடைந்தான். சீதையின் வாழ்வும் அங்கேதான் மலரப்போகிறது. அரசரில் பிறந்து அரசரில் வளர்ந்து அரசியாகிவிட்டால் அதில் என்ன புதுமை இருக்கிறது?அவள் ஒரு காவியத்தின் தலைவியாகப் போகிறாள். அந்தத் தலைமைப் பதவியைக் கொடுத்தது யார்? கேகயன் மகள்தான். அதை இந்த உலகம் உணராது. உணர்வதற்கு இப்பொழுது காலம் இல்லை. அத் தகைய உணர்வும் எனக்குத் தேவை இல்லை. என் னுடைய அழுகலில்தான் புதிய வாழை செழிக் கும். செழிக்கட்டுமே அதைக் கண்டு என் மனம் ஆறுதல் அடையும். குகன் பரதனைப் பார்த்து இவ்வாறு கூறினா னாம். "தாயுரைகொண்டு தாதை உதவிய தரணி தன்னைத் தீவினை என்ன நீத்துச் சிந்தனை முகத்திலே தேக்கிப் போயினை என்ற போழ்து புகழினோய் தன்மை கண்டால் ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ தெரியில் அம்மா!.