பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூனி: கைகேயி: கூனி: கைகேயி: கூனி: 159 காட்சி : 27 கூனி, கைகேயி எப்படியும் ஆட்சியைப் பரதன்தான் மேற் கொள்ளப் போகிறான், ஆனால் பதினான்கு ஆண்டுகள்தானே. அவ்வளவுதானே நானும் கேட்டது. அதற்கு மேல் தேவையில்லை. தசரதனைப் போல, பல ஆண்டு கள் ஆண்டு சுமையாக இருக்கத் தேவையில்லை. கைகேயி வென்றாள்; அது போதும். உன் மகனுக் குத்தான் ஆட்சி என்று சொல்லித்தான் என்னைத் திருமணம் செய்துகொண்டார். பிறகு மன்னன் தான் சொன்ன வாக்கை மழுப்பி மாற்ற நினைத்தார். அதை வளர்ப்புமகன் ஆள்வதும் நான் விரும்பு வதுதான். இவன் பதினான்கு ஆண்டுகள் ஆளட் டும். பிறகு அவன் பதினான்கு ஆண்டுகள் சரிசம மாக ஆளும் உரிமை பெற வேண்டும் என்பதுதான் என் வரததின் அடிப்படை நந்தியம் கிராமத்தில் தங்கிவிட்டானே, அயோத் திக்குத் திரும்பவில்லையே. அவன் எங்கிருந்தாலும் என்ன? இருந்து ஆள வேண்டும். அயோத்தி நகரத்தின் ஆரவாரத்தில் அவன் மங்கிப் போகக் கூடாது. அமைதியான இடத்தில் இருந்து நீதியை நிலை நாட்ட வேண்டும். இங்கே அவனுக்கு எப்படி அமைதி கிடைக்கும்? மக்கள் அவனைப் பழித்துக் கொண்டே இருப்பார்கள். அதுவும் நல்லதுதான். எனக்கும் அமைதி கிடைக்கும். உலகம் உன்னைப் பற்றி எப்பொழுதும் பழித் துக்கொண்டே இருக்கும்.