பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 வாலி: விரும்பவில்லை. ஆனால் ஒன்று மட்டும் கேட் கிறேன். அதற்கு விடை நல்கினால் போதும். செருக்களத்தில் நேரே நின்று போர் செய்யாமல் வேடுவரைப் போன்று மறைந்து அம்பு எய்தது ஏன்? அதை எப்படிச் சரி என்று நிறுவப் போகிறாய்? (இராமன் தலை குனிகின்றான்) முன்பு நின் தம்பி வந்து சரண் புகுந்தான். முறை யற்ற உன்னைத் தென்புலத்து உய்ப்பேன் என்று செப்பினான் என் அண்ணன், போர்க்களத்தில் நீயும் உயிர்மீது விருப்புக்கொண்டு, யானும் அடைக்கலம் என்று சொல் லி விடு வாய். அதற்காகத்தான் மறைந்து நின்று எய்தான். இப்படிச் சொன்னால் அதற்கு நான் மறுத்துப் பேச விரும்பவில்லை. ஒன்று மட்டும் வேண்டுகிறேன். தப்பித் தவறி இந்த அம்பை என் தம்பியின் மீது மட்டும் செலுத்த வேண்டாம். அவன் தவறு செய்யக்கூடும். அப்பொழுது என்னைக் கொன்றது போல் அவனைக் கொல்லவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். மற்றொன்று உன்னிடம் இரக்கின்றேன். என் தம்பியை உன் தமபிமார்கள் தன் அண்ணனைக் கொல் வித் தான் என்று இகழ்ந்தால் அவர்களைத் தடுக்க வேண்டும். இதோ! இந்த அனுமனை உன் கை வில் என நினைத்துப் போற்று! இவரைக் கொண்டு இனி நீ உன் துணைவியைத் தேடிக்கொள். இதுதான் நான் இறுதியாகக் கூறக் கூடியது. (சாய்கிறான்.) காட்சி: 7 (சுக்கிரீவன், அனுமன், இராமன், இலக்குவன் அங்கதன் முதலானோர்.)