பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுக் :

[g9/9ئے

இரா: 23 இலக்குவ! இனிக் கதிரோன் மைந்தனை உன் கையாலேயே மகுடம் சூட்டு. மாருதி! முடிசூட்டு விழாவிற்கு வேண்டுவன இப்பொழுதே கொணர்க. (அனுமன் முடிகொண்டு வந்து தருகின்றான். இலக்குவன் சுக் கிரீவனுக்கு முடிசூட்டு கின்றான்.) (வாழ்த்துரை வழங்குகிறான்.) நல்லவிதமாக ஆட்சி நடத்துக அறவழி நின்று ஆட்சி செய்க சிறியர் என்று இகழ்ச்சி செய்யாதே; கூனிக்குச் செய்த சிறுமைதான் என் துயருக் கெல்லாம் காரணம். மங்கையர் பொருட்டால் மாந்தர்க்கு எய்தும் மரணம் என்பது வாலியின் வாழ்வு தரும் பாடம் என்பதையும் நீ உணர வேண்டும். மங்கையராலேயே அல்லலும் பழியும் ஆதல் எங்கள் வாழ்வைக் கொண்டு நீ உணர வேண்டும். நிலையான அரசு இயற்றி, மாரிக்காலம் முடிந்ததும் உம் கடற்பெருஞ் சேனையோடும் வந்து சேர்க! போய் வருக! அப்படியே செய்கின்றேன்; மாரிக்காலம் முடிந்ததும் காலம் தாழ்த்தாமல் கடற் பெருஞ்சேனையோடும் வந்து சேர்கின்றேன். ஐயனே! நான் மட்டும் உங்களோடு வர அனு மதிக்க வேண்டுகின்றேன். நீர் ஏவுந் தொழிலை இருந்து செய்வேன ஏற்றருள்க! சொல்லின் செல்வ! அமைச்சன் நீ இல்லையெனில் ஆட்சியில் சுக்கிரீவன் பிழை செய்வான். நிலை கலங்கிய அவ்வரசினை நிலை நிறுத்தல் உன் கடமையாகும். நீதான் அதற்கு உரிய துணைவன்.