பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 அனு: இரா: இரா. சுக்: தருமத்தின் உருவமாக விளங்கும் சுந்தரனே! நீயும் அவனுடன் இருந்து, பின்னர் வா! இது என் வேண்டுகோள். ஆணை ஈது ஆயின் அதனையே புரிவேன். ஆழி யாய்! வாழி நீர், காட்சி: 8 இராமன் இலக்குவன் மாரிக்காலமும் மறைந்தது. சுக்கிரீவன் வாழ்வில் மயங்கினான் போல் தோன்றுகிறது. உன்னைச் சுக்கிரீவன்பால் அனுப்பினேனே என்ன ஆயிற்று? மங்கையர் திறத்தால் மாந்தர்க்கு மதியும் மயங்கும் என்பது உங்கள் வாக்குத்தானே! அதனைச் சுக் கிரீவன்பால் கண்டேன். ஆனால் நான் சென்றதும், உணர்வு பெற்றுக் கடமை உணர்வு உந்த அவனும் அனுமனும் இதோ வந்து கொண்டிருக்கிறார்கள். எனக்குத் தெரியும். சொல்லின் செல்வன் துணை யுள்ளளவும் சுக்கிரீவனுக்குப் பிழை செய்ய வாய்ப் பல்லை, வரட்டும். இனி மேல்தான் மிகப் பெரிய கடமை காத்துக் கொண்டிருக்கிறது. அதோ அவர்களும் வருகிறார்கள். (காலடியில் விழுகிறான்) திருந்தழை திறத்தினால் நீர் வருந்தி இருப்ப, யான் வாழ்வில் வைகினேன்; என்னை. மன்னிக்க வேண்டியதில்லை. நீ தவறு செய்ய மாட்டாய். உன்னைப் பரதனாகவே கருதுகின்றேன். உன் செயலில் பிழை நேராது. மாருதி எங்கே?