பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 சீதை: துயில் எனக் கண்கள் இமைத்ததும் இல்லை, முகிழ்த்ததும் இல்லை. புலிக்குழாத்தில் அகப்பட்ட மான் என்றாவது துரங்க முடியுமா? திரிசடை தூங்காமல் இப்படியே விழித்துக் கொண்டிருந் சீதை: தால், நான் என்ன செய்வது? அவர் நினைவு என் கண் களில் மிதந்து கொண்டே நிற்கின்றது. கரிய மேக மும் அஞ்சனமும் கண்டால் அவர் திரு உருவம் உடனே பளிச்சென்று தென்படுகிறது. விதி வலி கடத்தல் அரிதென்று வானையும் மண்ணையும் நோக்கி அவர் வருவார் வருவார் என்று காத்து நிற்கின்றேன். நிச்சயமாக அவர் வருவார் என்ற நம்பிக்கை எனக்கு உறுதிபடுகிறது. திரிசடை என்ன அக்கா ஏதாவது கனவு கண்டீர்களா? சீதை: என் இடம் துடிக்கின்றது. ஏதோ நன்மை வரக் காத்துக் கிடக்கின்றது. இடம் துடித்தால் எப் போதும் எனக்கு நன்மை உண்டாகும். திரிசடை எனக்கும் ஒர் இனிய கனவு உண்டாயிற்று. இரா வணன் அழிவதும் நீ விடுதலை பெறுவதும் போன்ற ஒரு கனவு கண்டேன். அதோ மென்னி றத் தும்பி உன் செவியில் வந்து ஊதிப் போகின்றது. இவற்றை ஆராய்ந்தால் உன் ஆவி நாயகன் ஏவிய துரது வந்து எதிர்வான் என்று எண்ணுகின்றேன். அதோ யாரோ வருவதுபோல் தோன்றுகிறது. (அனுமன் மறைந்து நின்று காண்கின்றான்) அனுமன்: ஆம்! இவள் தேவியே! வேறு யாரும் இல்லை. அறம் அழியவில்லை. நானும் இனி அழியத் தேவையில்லை. தேடினேன், கண்டேன். தேவியே