பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 இவன் இராவணனாகத்தான் இருப்பான். நின்று கவனிப்போம். இவன் தேவியை! சே முடியாது: ஒல்லாது; இவன் செயல் அங்குச் செல்லாது. காட்சி: 11 சீதை இராவணன் (சீதை நிலம் நோக்கி நிற்கின்றாள். அவனை ஏறெடுத்துப் பார்க்கவில்லை) இராவணன்: இன்று என்பது இறந்தது; நாளை என்பதும் சீதை: நகர்கிறது. என்றுதான் நீ இசைவாய்! என்னைக் கொன்று இறந்தபின் நீ கூடுதியோ என்னை! திலகமே உலகமே என் திருவடியில் கிடக் கிறது. நான் உன் சேவடியில் கிடக்கின்றேன். அநங்கன் என்னைப் படுத்தும்பாடு நீ அறிந்தி லையோ! என்னையும் அவன் அங்கம் அற்றவனாக ஆக்கத் துளைக்கின்றான். பூந்தண் வார்குழற் பொற் கொழுந்தே காடு கடந்து திரியும் மானுடர் வாழ்வு ஒரு வாழ் வாகுமா! மானுடரை மதித்து அவர்களையே எண்ணி வாழும் நீ? நான் மனிதப் பிறவிதான். நீ மனிதனாக நடந்து கொள்ளவில்லையே என்பதற்கு வருந்துகிறேன். நீயும் ஒரு வீரனா! அஞ்சினாய் ஆதலால்தான் வஞ்சனை மானை ஏவி மாயையால் மறைந்துவந்தாய்! எம் கோமகன் வந்தால் உன் தலை உருளும், அப்பொ ழுதுதான் மானுடம் வென்றதா இல்லையா என் பதை உணர்வாய். இந்த இடத்தை விட்டுப் போ! உன்னை எரித்து ஒழிப்பேன். ஆனால், என்