பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை கம்பன் கவிதையைப் போல் பிற கற்றோர்க்கு இதயம் களியாது. அனுமன் சொல்லின் செல்வன் என்பது கம்பர் அமைத்த பாத்திரப் படைப்பு. இராமன், "யார் கொல் இச் சொல்லின் செல்வன்" என்று இலக்குவனைக் கேட்கிறான். கிட்கிந்தை காண்டமும், சுந்தர காண்டமும் இப்பாத்திரப் படைப்பை மிக அழகாக எடுத்துக் காட்டுகின்றன. இராமனை அனுமன் சந்திப்பதும். சீதையின் பால் இராமன் அனுமனைத் தூது அனுப்புவதும், அனுமன் கடல் கடந்து இலங்கையைக் காண்பதும், சீதையைக் கண்டு செய்தி பெற்றுத் திரும்புவதும், மீண்டும் இராமனைச் சந்தித்துச் செய்தி சொல்லுவதும் ஒரு தனி நாடகத்திற்கு வேண்டிய அமைப்புகளாக விளங்குகின்றன. இவையே இந்நூலின் இழைகள். இலககிய நாடகங்கள் என்ற முறையில், பாஞ்சாலி சபதம் பாரதியார் கவிதை நாடகமாகத் தந்துள்ளார். அதே போலக் கவிதை நாடகம் இயற்றும் ஆற்றல் இல்லை யாயி னும் கவிதை மொழியில் சிறந்த சொல் வளமும் இலக் கியச் சிறப்பும் பொருந்தும் வகையில் நாடகத்தை யாத்து ள்ளேன்; கம்பனின் காவியம் எனக்கு முதல் நூல். இதில் உள்ள பெருமை அனைத்தும் கம்பரைச் சார்ந்தது. பாத்தி ரங்கள் அறிமுகம் தேவையில்லை. அடுத்த இரண்டு நாட கங்களுக்கும் முன்னுரைகள் அங்கங்கே தரப்பட்டுள்ளன. அணிந்துரை நல்கி அருளிய என் பேராசிரியர் டாக்டர் மு.வ. அவர்களுக்கு மிக்க நன்றியுடையேன். ரா. சீனிவாசன்.