பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

solgos: சீதை: solgos:

g DI}9ے

39 வந்திங்கு எம்பிரான் நாமஞ் சொல்லி உருக்கி என் உணர்வைத் தந்தாய். இறக்கத்துணிந்த எனக்கு உயிரைத் தந்தாய். இதனின் உதவி வேறு உண்டோ! வாழி நீ! ஆழிசூழ் உலகம் ஆளும் அண்ணலின் தூதுவன் நான்; வானரத் தலைவனின் அமைச்சன் நான். அண்ணல் இராமனின் ஏவலில் உம்மைத் தேடியே இங்கு வந்தேன். இன்னும் சிறிது பொறுத்திருந்தால் இதோ இந்த மாதவிக்கொடி தன் கொடுமையைச் செய்திருக்கும். விளக்கம் தேவையில்லை. அண்ணல் நீர் இருக்கும் இடம் தெரியாமையே தவிர, மீட்க அறியாமை அன்று.அவர் உயிர் நீங்கள். அதனால்தான் அவர் தம் உயிரைப் போக்க முடியாமல் அங்கே நிற்கின்றார். அவர் உடலை அங்குக் கண்டேன்; உயிரை இங்குக் காண்கின்றேன். நீர் இருக்கும் இடம் தேடும் முயற்சியில்தான் எம் இறைவன் காலம் தாழ்த்தினன். பின், எப்படித்தான் என்னைக் கண்டுபிடித்தீர்கள்? அன்னாய்! நீர் அன்று கீழே போட்ட அணிகள் தாம் உம் மங்கல அணியைக் காத்தன. நீர் சிந்திய நகைகள் உம் கண்ணிரை நிறுத் துகின்றன. இந்த அணிகலன்களைக் கொண்டுதான் நீர் தென்திசை ஏகி இருக்கவேண்டும் என்று அறிந்தோம். அண்ணல் இராமன் சொல்லிய அடையாளங்களைக் கொண்டுதான் உங்களை அறிந்தேன். இந்தக் கணையாழியையும் அவரே என க்குத் தந்தார். ஆழியையும், மாயையால் அரக்கர் செய்கையால் கொண்டு வந்தேன் என்று எண்ண