பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 epigy: சீதை: லாம். மற்றும் சில அடையாளங்கள் சொல்கிறேன். அதற்குப் பிறகு நீங்கள் அதனைப் பெற்று அறியலாம். எல்லாம் வியப்பாக இருக்கிறது! நீர் சொல்லுவது அவ்வளவும் உண்மையாக இருந்தால், இழந்த மணி யைப் பெற்ற நாகம் போன்று ஒளி பெற்றவளா வேன் பழந்தனம் மீண்டும் படைத்த பழமையோர் போல் ஆவேன். குழந்தையை உயிர்த்த மலடிக்கு உவமையாவேன்; ஏன்? இன்னும் சொல்லப் போனால் விழிபெற்ற குருடனும் ஆவேன்? எங்கே அந்த ஒளி? காட்டுக அதனை. அன்னையே! அடுத்து அவர் அடவி செல்ல நின் றார். அப்பொழுது விட்டுச் செல்வதற்காக உடுத்த ஒரு துகிலோடும் கடுத்த முகத்தோடும் உடன் புறப்பட்ட செய்தி உண்மைதானே! அதனை நினைவுபடுத்திச் சொல்ல இசைத்தார். ஆண்ட நகரைவிட்டு நீண்ட துரம் செல்லு முன்பே எங்கே காடு என்ற உங்கள் கேள்வி அவருக்குப் புன்முறுவல் ஊட்டவில்லையா? சுமந்திரனிடம் கடைசி செய்தியாக உம் தங்கையருக்குச் சொல்லிய செய்தி இதுதானே. கிள்ளையொடு பூவைகட்குக் கிளவிகள் கிளத்துக; அவற்றைப் போற்றுக என்ற செய்தியைச் சொல்ல வில்லையா? மீட்டும் உரை வேண்டுவன இல்லை என்று நினைக்கிறேன். இதோ! இந்தக் கணை யாழியை இனியேனும் பெற்றுக் கொள்ளுங்கள். இறந்தவர் மீண்டும் பிறந்த பயன் எய்தினேன் நான். மறந்தவர் மீண்டும் உணர்வு வந்தவர் போல் ஆயினேன் நான்.