பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ego/gol: 41 (அதனை வாங்கி மார்பிலும் தலையிலும் வைத்து மலர்க் கண்களில் ஒற்றிக் கொள்கிறாள். மறுபடியும் அதனை எடுத்து நோக்குகின்றாள். கண் களில் நீர் பட்டு அதனை நீள நோக்குகின்றாள்) இது மணியா! அன்று என் கண் இல்லை; வாழ்வின் ஒளி. (மீண்டும் அனுமனை நோக்குகின்றாள்.) உலகம் தந்த முதல்வன் துதாய் வந்தாய் என் உயிர் தந்தாய். உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன். எனக்குத் தாய். தந்தையும் நீயே! அருளின் வாழ்வே! இம்மையும் மறுமையும் எனக்கு நல்கினாய். இருமையிலும் இனிமையை எனக்குத் தந்தாய். பகைவர் அஞ்சும் பண்புடைய வீர! துணை யிலேன் பரிவு தீர்த்த வள்ளலே! உன்னை என்ன வென்று கூறி வாழ்த்துவேன். சொல்லின் செல்வமே! உலகம் ஏழும் வீழ்வுற்ற ஞான்றும் பல்லாண்டு நீ வாழவேண்டும். இதுதான் என் வாழ்த்துகள். இதற்குமேல் என்னால் சொல்ல இயலவில்லை என் பதால் ஒன்றும் கூறாமல் இருக்கிறேன். சொல்லின் செல்வரே! மேலும் நீர் சில சொல்ல விழைகின் றேன். எம் தலைவர் எப்படி இருக்கின்றார்? அவர் நலம்பற்றிப் புலம்பும் எனக்கு ஏதாவது சொல்ல வேண்டுகிறேன். அன்னையே! நான் எதனைச் சொல்லுவேன். பொன்மானின் பின்னால் அவர் மயங்கிச் சென்ற கதையைச் சொல்லவா? கட்டிவைத்த பன்னகசா லையில் வந்து நின்று உங்கள் திருவடிவு காணா மல் ஏங்கிய அதனைச் சொல்லவா? அன்றி உம் மைத் தேடித்தேடி இறுதியில் சடாயுவால் இரா