பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

g.OI/9ئے

வணன் உம்மை எடுத்துச் சென்ற அவலச் செய் தியை அறிந்ததைச் சொல்லவா? வாலியைக் கொன்று எங்கள் நட்பைப் பெற்று எங்களுக்குத் தலைமை ஏற்று என்னைத் தூது அனுப்பிய வித த்தைச் சொல்லவா? அன்றி உம்மையே எண்ணி எண்ணி அவர் விடும் சோகக் கண்ணிரின் வெம் மையை அளந்து கூறவா! எதைச் சொல்வது நான்? இவற்றை எல்லாம் கேட்கும்பொழுது ஒருபக்கம் உவகை மற்றொரு பக்கம் சோகம். இந்த இரண்டு உணர்வுகளுக்கு இடையே நான் இப்பொழுது மிதக்கின்றேன். அன்பின் இம்மொழி கேட்டு எம் தலைவரின் நெஞ்சினில் வருத்தம் உன்னுகின்றேன்; என்புற உருகி நிற்கின்றேன், ஏங்குகின்றேன்; துன்பமும் உவகையும் சுமந்த உள்ளத்தவளாக நிற்கின்றேன்; இரண்டுவகை உணர்வில் மிதக் கின்றேன். தாயே! எனக்கு விடைநல்க வேண்டுகின்றேன். உங்களை என் தோள்மேல் ஏற்றி இராமன்பால் சேர்க்க உங்கள் ஆணையை வேண்டி நிற்கின்றேன். அறிஞ! சொல்லின் செல்வ அறிவும் ஆற்றலும் நிறைந்த அன்ப! பண்பு மறந்து நீ பேசுவதற்கு மிக வும் வருந்துகிறேன். இராவணனுக்கும் உனக்கும் இச் செய்கையில் என்ன வேறுபாடு இருக்கிறது? அவ னும் கள்ளத்தனமாக என்னைக் களவாடினான். நீயும் அதே செய்கையை எண்ணுகின்றாய். நீ ஆண்மகன் என்பதை மறந்து பேசு கிறாயே! உன் தோளில் நான் அமாவதா? பண் பிழந்து பேசி விட்டாய். நீ உடன்பிறந்த பாசத் தோடு பேசலாம். ஆனால், என் பெண்மனம் அதை எண்ணிப்பார்க்கவே நாணுகின்றது. உன்னை நம்பி நான் வந்து விட்டால் என் தலைவனின் ஆற்ற