பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 சீதை: என்று அன்பினோடு சொன்ன மெய்ம்மொழியை மட்டும் சொல்லுதி. அதுவே போதும். மற்றும். இராமன் குரல் : இந்த இப்பிறவியில் இரு மாதரைச் சிந்தையா சீதை: solgol: லும் தொடேன் என்று அவர் அளித்த செவ்வரத்தையும் நினைவு படுத்து. இந்த இரண்டும் அன்னைபால் கொண்டி ருந்த அன்பையும், என்பால் கொண்டிருந்த உறவை யும் உணர்த்தும். கணையாழி நீ கொண்டுவந்து கொடுத்தாய். நானும் ஒரு மணியாழி தருகின்றேன். தலையில் அணியும் இச்சூடாமணியை என் துகிலில் முடித்து வைத்திருக்கின்றேன். அதனை நான் தந்த அடையாளமாகக் கொடு. அவர் என் தலையில் சூடிய அம்மணி, இப்பொழுது சூடாமணியாக இருக்கிற்து. (அனுமன் வாங்குகிறான். அதனை வாங்கி வியக்கின்றான்.) வருகிறேன். இன்னும் என் பணி தொடர்கிறது. அதனைச் சொல்லாமல் செய்வதுதான்.நல்லது ஈண்டு இப்பொழிலை அழித்து அரக்கர்களைக் கொன்று இராவணனை எதிர்த்துப் போவேன்; அப்பொழுது தான் இந்த அரக்கர்கள் எம் ஆற்றலை உணர்வர்; இராமனைக் கண்டு அஞ்சுவர். வருகிறேன்.