பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 இராவ: egos.g)s. இராவ: sol®s: தான் கட்டுண்டேன்; மேலும் உம் ஊரையும், ஊர் மக்களையும் கண்டு போகவேண்டும் என்னும் ஆவல் உண்டு. நீரே ஊரெல்லாம் இழுத்துச் சென்று ஊரில் எல்லாப் பகுதிகளையும் காட்டினர். அவர்களையும் ஒருசேரத் தெருவில் கொண்டு வந்து நிறுத்தினர். இலங்கையைப் பார்த்துவிட்டேன்; மிக்க நன்றி. ஆரவாரத்தோடு நீங்கள் என்னை வரவேற்று ஊர்வலம் நடத்தினர்கள். பேசக் கற்றிருக்கிறாய்! மிக்க திறமைசாலி. அதனால்தான் என்னைத் தூதுவனாக அனுப்பி யிருக்கிறார்கள். நீ யார்? இதுவரையிலும் நான் காணாத ஒரு வனாகக் காண்கின்றாயே! நீ வந்த காரியம் யாது? பிறர் உன்னை அனுப்பினார்களா? நீ என்ன சிவனா! அயனா! அன்றி எமனா! நீ கூறிய யாரும் இல்லை. இராம துரதன் நான்; இலங்கை வந்துள்ளேன். அந்த இராமன் யார் என்று கேள், சொல்கிறேன். முனிவரும் அமரரும், மூவர் தேவரும், மற்று யாவரும் முடிக்க முடியாத செயலை முடிக்கப் பிறந்துள்ளான். அறம் தலை நிறுத்தி மறத்தை ஒழித்துத் தீயவரை ஒறுத்து, நல் லோரை வாழவைக்கத் திருமாலே இராமனாகப் பிறந்துள்ளான். இராவ: ஆகா! பிரமாதம். இதை வைத்துக்கொண்டு நீ அழ காகச் சொற்பொழிவு செய்யலாம். அனு: அன்னவனுக்கு அடிமை செய்வேன். நாமமும் அனு மன் என்பார்கள். தேவியைத் தேடி நாற் பெரும் திசையும் போந்த மன்னரில் தென்பால் வந்த சேனைக்குத் தலைவன் அங்கதன் மன்னவன் வாலி மகன். அவன் தலைமையில்தான் இங்கே தூதுவ னாகத் தனியே வந்துள்ளேன்.