பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SS இரா. பிறகு அவள்? அனு: ஒன்று உமக்குப் கொடுத்தாள். அதுவும் ஒரு மணி தான். சூடாமணி என்றாள், அதனையும் கொண்டு வந்துள்ளேன். இரா. சூடாமணியை எனக்குச் சூட வந்தாய் ! மணி யேந்தி வந்த மணியே! அனு: இந்த மணியோடு என் பணியும் முடிந்தது. இரா. வாழ்க அனுமன்! வாழ்க சொல்லின் செல்வன். சுக்கிரீவன்: அவன் பணி முடிந்தது. இனி வில்லின் செல்வராகிய உங்களுக்குத்தான். கடமை காத்து நிற்கிறது. இனி வில்லுக்குத்தான் வேலை சொல்லுக்கு இல்லை. வாழ்க வில்லின் செல்வர்கள். வாய்ச் சொற்கள் இந் நூலின் இரண்டாவது நாடகமாக இதனை அமைத்துள்ளேன்; சொல் லின் செல்வன் கம் பன் படைப்பு. அவ்வை கபிலர் இவர்களின் வாய்ச்சொற்கள் தமிழகத்தின் மையமாகக் கொண்டு இந்நாடகம் சுழல்கிறது. இச் சுழ்ற்சியின் பாத்திரங்கள் அவ்வை, அதிகன், கபிலர் பாரி மகளிர், அவன் மனைவி கண்ணகி. இச் சுழற்சியில் ஒர் அழகு வடிவம் அதைத்தான் ஒரு நாடக மாகப் படைக்கிறேன். கருத்து, பழமையோர் படைத்தது; அதனைப் பொருத்தி நாடக வடிவு தந்தது புதுமை, ஒர் படைப்பு - இது தான் நான் செய்தது. ரா. சீ