பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 அவ்: கபி: அவ்: கபி: அவ்: கபி: அவ்: கபி: அதனால் என்ன? அவன் கொடை வளத்தை உங்கள் பாவளத்தில் சிறப்பித்தீர்கள். இங்கேதான் தவறு செய்துவிட்டேன். யாரிடம் பேசுகின்றோம் என்பதை மறந்து பேசி அதை நினைக்கும் போதுதான் நான் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டேன் என்பதை உணர் கின்றேன். ஆணவத்தால் தவறு செய்து விட்டேன். வாய்ச் சொல்லில் பிழை செய்து வைத்தேன். வாய்மொழிக் கபிலன் தவறிப் பேச மாட்டான். வாய்மொழிதான் என் தலைவனைப் பகைவரிடம் காட்டிக் கொடுத்துவிட்டது. 'கடந்தடு தானை மூவிரும் கூடி உடன்றனிர் ஆயினும் பறம்புகொளற்கு அரிதே முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நன்நாடு முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர் ஆகா, அவன் வள்ளல் தன்மையை மிக அழகாக உரைத் தீர், பறம்பு நாடு பரிசிலர்க்கு உரியது என்றீர்கள். அதோடு நின்றிருந்தால் சொல்லில் பிழை இல்லை. வாய்மொழியால் கெட்டேன். ‘யாமும் பாரியும் உளமே குன்றும் உண்டு நீர் பாடினிர் செலினே என்று வழி காட்டிவிட்டேன். பாடிச் சென்றால் குன்றம் உண்டு என்று நீங்களே காட்டிக்கொடுத்துவிட்டீர்கள். 'அளிதோ தானே பேரிருங் குன்றே வேலின் வேறல் வேந்தர்க்கு அரிதே'