பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவ் : கபி: கபி: 61 என்று அவனை வெல்லும் அருமையைப் பெருமை படக் கூறினேன். 'நீலத்து இணைமலர் புரையும் உண்கண் கிணைமகட்கு எளிதால் பாடினள் வரினே என்று அவனைக் கொல்லும் எளிமையைச் சிறுமை படக் கூறிவிட்டேன். அவர்களுக்கு நானே வழி காட்டிக் கொடுத்துவிட்டேன். அதனால், அதனால்! அந்தக் காட்சியை உங்கள் கண் முன்னால் வைக்கின்றேன்: சொன்னால் அது என்னால் முடியாது. காட்சி : 2 அ (செய்திக் காட்சி) கபிலர், பாரிமகளிர் பற ம்பே! உன்னை விட்டுப் பிரியும் எங்கள் துன்பத்திற்கு வரம்பே இல்லை. ஈண்டு நின்று பார்த்தாலும் தோன்றும் இச்சிறுமலை. சென்று நின்று பார்த்தாலும் தோன்றும் இச்சிறுமலை. இது முன் இப்பொழுது யார் என்று கேட்பாரற்றுப் பாழ்பட நிற்கிறது; தேர்வீசு இருக்கை உடைய அக் குன்று பகைவர் கையில் சிக்கியுள்ளது. ஒரு சார் அருவி ஆர்க்கும்; ஒரு சார் பாண ருக்கு வார்த்தகள் அலைத்து ஒழுகும். இந்த இரண்டு காட்சிகள் எம் கண்ணைவிட்டு அகலா, வானத்தில் மட்டும் வளர்மதி காட்சியளிக்க வில்லை. பாரியின் பறம்பிலும் ஒரு வளர்மதி காட்சியளிக்கும் எட்டாம் நாள் பிறையைப் போல்