பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 கபி: யாக நின்றுவிட்டது. அவன் மார்பில் பாய்ந்த வேல் புலவர் நாவிற் சென்று பாய்ந்தது. அவனை நினைத்தால் அந்தப் பழைய காட்சிகள் வெள்ளம் போல் வேகமாக வந்து நிற்கின்றன. கள்ளையும் தேனையும் அள்ளிப் பருக எனக்கு அளிப்பான். கறியும் சோறும் கலத்தில் ஈந்து பகிர்ந்து உண்பான சோற்றில் கறி இருந்தால் அதைத் தனியே எடுத்து எனக்குத் தருவான். வேற்றுப் போர்க்க ளத் தில் அவன் மட்டும் தனித்து நிற்பான். உண்ணத் துணை தேடுவான்; போர் பண்ணத் தனியே செல்லுவான். அவன் மார்பிற் பாய்ந்த வேல் அவனை மட்டும் வீழ்த்தவில்லை; பாணர் கையில் பாய்ந்தது; புலவர் நாவில் தைத்தது. இந்த நினைவுகள் எல்லாம் என் நெஞ்சில் மிஞ்சி வழிகின்றன. நரந்தம் நாறும் தன் கையால் புலவு நாறும் என் தலையைத் தடவிக் கொடுப்பான். அத்தகைய தலைவனை நான் இழந்தேன். என் வாய்ச்சொல் அவனைக் காக்க இயலவில்லை, அவர்கள் மறைவதற்கு நான் மட்டும் காரணம் அல்ல. அவர்கள் வீரம்தான்; உன்னையும் அவ் வாறு பேசவைத்தது உன் வாய்ச் சொல் அல்ல; பாரியின் கொடை மறம், வீரம், அதனால் நீர் வருந்திப் பயன் இல்லை. நம் தலைவர்களின் அஞ்சா நெஞ்சம் தான் அவர்களைப் போர் முனையில் நிறுத்தியது. அவர்கள் அஞ் சவில்லை. ஆனால் நம்மை அஞ்சும்படி செய்துவிட்டார்கள்; அவர்கள் விட்ட அவலம் நம் உள்ளத்தை அவித்துவிட்டது. வாய்ச் சொற்கல் அடங்கும்படி செய்துவிட்டன. நம் உணர்வுதான் இனிப் பேசும்.