பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 சொல்லவேண்டும் (வெளியேறுகிறான்) வசிட்டன்: (தனிமொழி) மகன் பட்டத்துக்கு வருகின்றான் என்று அவள் மகிழ்வாள். மகன்! யார்? இராமனா? பரதனா? என்ன இருந்தாலும் அவள்? காட்சி : 2 கைகேயி, கூனி கைகேயி: யார் அது? கூனி: உன் தலைவர் மன்னன் தசரதன் உன்னிடம் வர இருக்கிறார். கைகேயி: பழக்கம்தான்; இந்த உலகத்தில் நான்தான் அவருக்கு உயிர்; அவர் உயிரே என்னிடத்தில்தான் இருக்கிறது. கூனி: நீ என்றால் பைத்தியக்காரி ஆசை உன்மேல்; அன்பு இன்னொரு த் தி யின் மேல்; இதுவே ஆடவர் சிந்தை. கைகேயி சிந்தை-அதைப்பற்றி என்ன இப்பொழுது நிந்தை. கூனி: ஆடவரே பெண்ணினத்தைப் பழிவாங்க நிற்பவர். கைகேயி: புதிய விளக்கமாக இருக்கிறதே! கூனி: அனுபவத்தால் சொல்கிறேன். அந்த இராமன் அவன் என் முது கில் உண்டை வில் லால் குறிபார்த்து அடித்தானே, அது அவன் வீரத்திற்கு. கைகேயி: இழுக்கு அல்ல. விளையாட்டு. கூனி: தாடகையை வீழ்த்தினானே.