பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 காட்சி: 4 இராமன்: சீதை, இலக்குவன், சுமந்திரர். இராமன்: சீதை: இராமன்: சீதை! மணக்கோலம் கொண்ட நீ மணிமுடிக் கோலம் காணப் போகிறாய். அப்பொழுது, ஆட்சியில் பாதி உனக்கு. எப்படி? சரி பாதி என்னோடு உட்காரப் போகிறாய், சிம்மாசனத்தில் உனக்குப் பாதியிடம். நான் அவ்வளவு பருத்தா இருக்கிறேன். பாதியிடம் கேட்க, இரண்டுபேரும் உட்கார்ந்து ஒன்றும் பேச முடியாது. மற்றவர்கள் பேசுவதைத்தான் கேட்க வேண்டும். அது ஒன்று போதுமே; பெண்ணொருத்தியை வாய் மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்கச் சொன் னால் அதுவே போதும் அவளுக்குத் தண்டனை. சரியான தண்டனைதான் எனக்குக் கிடைக்கப் போகிறது. இலக்குவன்.அண்ணா! நாடெங்கும் மகிழ்ச்சியில் திளைக்கி இராமன்: றது. நான் மட்டும். என்ன உனக்கு? இலக்குவன்: உங்களோடு சுற்றும் வாய்ப்பை இழக்கின்றேன். உங்களுக்குச் சேவை செய்யும் வாய் ப்பை இழக்கின்றேன். ஏன்? இராமன்: