பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 கைகேயி: இராமன்: கைகேயி: இராமன்: கைகேயி: இராமன்: இந்த உலகைப் பரதனே ஆளவேண்டும். தாழ் இரு சடைகள் தாங்கி நீ தவம் மேற்கொள்ள வேண்டும். கானகம் நண் ணிப் புண் ணிய நதிகள் ஆடி ஏழிரண்டு ஆண்டு அதாவது பதினான்கு ஆண்டுகள். கழித்து உடனே வந்துவிடு. அவ்வளவுதான். மிக்க மகிழ்ச்சி. இதைவிட உயர்ந்த செய்தி எனக்கு எப்பொழுதும் யாரிடமும் கிடைக்காது. அது உங்களிடம்தான் கிடைக்கும். உங்களால் தான் சொல்ல முடியும். சித்திரம் போல் விளங்கும் உன் திருமுகம் அன்ற லர்ந்த செந் தாமரை போல் மலர்ந்து விளங்குகிறது. நீ நல்லவன். சொன்னபடி செய் வாய். இதைவிட மகிழ்ச்சி தருவது வேறு ஒன்' றும் இருக்கமுடியாது. அஃது எனக்கு ஒருத்திக் குத்தான் தெரியும். வண்டியில் பூட்டிய எருதை அவிழித்துவிட்டால் எருதுக்கு மகிழ்ச்சிதானே உண்டாகும். அருளுடை உங்கள் செயலை எண்ணி எண்ணிப் பார்க்கிறேன். தாய்க்குத் தான் பிள்ளையின் துன்பம் தெரியும். இப்பொழுதுதான் நீங்கள் உண்மையான தாய் என்பதை உணர்கிறேன். பாரத நாடு உங்களை வழிவழியாகப் போற்றும்; வணங்குகிறேன். மன்னவன் பணியென்று கூறத் தேவையில்லை. உம் பணி என்று கூறினால் மட்டும் மறுத்து விடுவேனோ? என் பின்னவன் பெற்றசெல்வம் நான் பெற்ற செல்வம் அன்றோ? மின்னொளிர் கானம் இன்றே போகின்றேன். விடையும் கொள்கின்றேன். (இராமன் வெளியேறுதல்)