பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 கைகேயி (தனி மொழி) உண்மையில் இவன்தான் கடமை வீரன், அரிய செய்தியை எவ்வளவு எளிமையாக எடுத்துக் கொண்டான். இந்த உள்ளம் அவருக்கு இருந்தால். வயதானவர்களுக்கே பற்றுகள் அதிகம். அவர்கள் நினைப்பது போல்தான் உலகம் நடக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். உலகம் அவர்களை மீறி வேறுவழியில் செல் கிறது. இவர்களைத் தூக்கி எறிந்தவிடுகிறது. காட்சி 6 தசரதன், கைகேயி, கூனி, வசிட்டர். கோசலை. கூனி: என்ன? எல்லாம் வெற்றியா? கைகேயி: எதைக் கொண்டு வெற்றி தோல்வி கனக் கூனி: கிடுவது? வரத்தைக் கொண்டேன்; அவர் வருந் திக் கொடுத்தார். எப்படியோ ஒன்று. இராமன். கைகேயி: அவன் புறப்பட்டுவிட்டான். கூனி: இந்தக் கிழவர். கைகேயி புறப்படவில்லை. அழுது அழுது தேம்புகிறார். கூனி: அவரைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. என்ன முழுகிவிட்டது. இருவரும் அவருடைய மக்கள் தானே! யார் ஆண்டால் என்ன? என் மகன் முதலிற் பிறந்திருந்தால். பற்று, மூத்தவன்தான் வரவேண்டும் என்ற விடாப்பிடியான எண்ணம். கைகேயி பிள்ளைக்கு இருக்கிற அறிவுகூட இந்தக் கிழவ ருக்கு இல்லையே!