பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 கூனி: கைகேயி: தசரதன்: கைகேயி: கோசலை: வசிட்டன்: தசரதன்: பழமையில் ஊறியவருக்கு ஒரு சிறு புதுமையை யும் தாங்க முடியவில்லை. மகன் காட்டுக்குப் போவதை இவரால் தாங்க முடியவில்லை. இவர் மட்டும் காட்டுக்குப் போகி றேன் என்று என்னை மருட்டலாமா? இப்பொ ழுது போகட்டுமே, அவனோடு! சுடுகாட்டுக்குத்தான் போகவேண்டும். உன்னைச் சொல்லிக் குற்றம் இல்லை. நீ சொல்லுகிறாயே அந்தப் பற்றைத்தான். எனக்கும் பற்றுத்தான் இவ்வாறு கேட்கச் சொல் லியது. யாராவது ஒருவர் விட்டுக் கொடுக்க வேண்டியதுதானே. (வருதல்) என் மகன் யாருக்குத் தீமை செய்தான்? பரதன் ஆளட்டுமே. நானா வேண்டாம் என் கிறேன். இராமன் காட்டுக்குப் போகாமல், விதி வலி கடத்தல் முடியாதம்மா. அழாதே! எல்லாம் ஊழ்வினைப்படிதான் நடக் கும். அது ஒரு தனிக்கதை. காட்சி 6 (அ) (தசரதனின் இளைய பருவ நாள்களில் ஒரு நிகழ்ச்சி. வில்லைத் தாங்கி வேட்டைமேல் செல் கிறான், கரையில் நின்று நீர் நிலையைப் பார்க் கின்றான். தந்தையும் தாயும் குருடர்கள்; அவர் களுக்குத் துணையாக அவன் மகன் வழிகாட்டிச் செல்கின்றான்) முதியோன் மகனே! நீ நீர் மொண்டு வா. வேட்கை